தமிழ் வாய்ப்பூட்டு யின் அர்த்தம்

வாய்ப்பூட்டு

பெயர்ச்சொல்

 • 1

  கன்றுக்குட்டி, மாடு போன்றவை கண்டதையும் தின்றுவிடாமல் இருப்பதற்காக அவற்றின் வாய்ப்பகுதியில் கட்டப்படும் கூடு போன்ற அமைப்பு.

  ‘பிணையல் மாடுகளுக்கு வாய்ப்பூட்டு போடுவது உண்டு’

 • 2

  கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிக்கவிடாமல் அல்லது கருத்தைச் சொல்லவிடாமல் செய்யும் தடை; கட்டுப்பாடு.

  ‘பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டுப் போடும் வகையில் அரசு செயல்படக் கூடாது’
  ‘பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளிக்கக் கூடாது என்று அணி வீரர்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டிருக்கிறார்கள்’