தமிழ் வாய்வை யின் அர்த்தம்

வாய்வை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  (மாடு, ஆடு போன்றவற்றைக் குறித்துவரும்போது) தின்னுதல்.

  ‘மாட்டுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. காலையிலிருந்து தீவனத்தில் வாய்வைக்கவே இல்லை’
  ‘வடகம் காயவைத்திருக்கிறேன். நாய் வாய்வைத்துவிடாமல் பார்த்துக்கொள்’

 • 2

  (அங்கீகரிக்காத தொனியில் ஒருவருடைய செயலைப்பற்றிக் கூறும்போது) ஈடுபடுதல்; சம்பந்தப்படுதல்.

  ‘அறிவியல், இலக்கியம், சினிமா, அரசியல் என்று எல்லாவற்றிலும் வாய்வைக்கும் எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்’

 • 3

  (சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல்) அபசகுனமாக எதையாவது சொல்லுதல்.

  ‘கிளம்பும்போதே அந்த ஆள் வாய்வைத்தான். போகிற காரியம் என்ன ஆகுமோ தெரியவில்லை’