தமிழ் வாயில் மண்ணைப் போடு யின் அர்த்தம்

வாயில் மண்ணைப் போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (ஒருவரின்) பிழைப்பைக் கெடுத்தல்.

    ‘ஏழை வாயில் மண்ணைப் போட்டாவது நீ சம்பாதிக்க வேண்டுமா?’
    ‘எத்தனை பேர் வாயில் மண்ணைப் போட்டுச் சேர்த்த சொத்தோ தெரியாது. அவர் கண் முன்னாலேயே எல்லாம் அழிந்துவிட்டது’