தமிழ் வாயில் வை யின் அர்த்தம்

வாயில் வை

வினைச்சொல்வைக்க, வைத்து

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில் வரும்போது) (குறிப்பிட்ட உணவு, தின்பண்டம் போன்றவற்றை) சாப்பிட இயலுதல்.

    ‘ஏதோ எனக்குத் தெரிந்த மாதிரி சமைத்து வைத்திருக்கிறேன். வாயில் வைக்கிற மாதிரி இருந்தால் சரி’
    ‘விருந்தில் வாயில் வைக்கிற மாதிரி ஒன்றும் இல்லை’
    ‘ஊரில் இருப்பது ஒரே ஓட்டல். அங்கும் ஒன்றையும் வாயில் வைக்க முடியாது’