தமிழ் வாயு யின் அர்த்தம்

வாயு

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு காற்று.

  ‘வாயு வேகத்தில் குதிரைகள் பறந்தன’
  ‘வாயு பகவான்’

 • 2

  திடப்பொருளாகவும் திரவமாகவும் இல்லாத, பரவும் தன்மை கொண்ட ரசாயனப் பொருள்.

  ‘வெப்பத்தினால் ஒரு திரவம் வாயு நிலைக்கு மாறுவதை ‘ஆவியாதல்’ என்று அழைக்கிறோம்’
  ‘எரியும் தீக்குச்சியை வாயு நிறைந்த ஜாடிக்குள் போடவும்’
  ‘கந்தக வாயு’
  ‘விஷ வாயு’

 • 3

  வயிற்றினுள் இருக்கும் காற்று.

  ‘ஒரு நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்தால் வாயுக் கோளாறு ஏற்படும்’
  ‘வாயுத் தொல்லையால் ஒரே ஏப்பமாக வந்துகொண்டிருக்கிறது’

 • 4

  சித்த வைத்தியம்
  வாதம்.