தமிழ் வாயைக் கட்டு யின் அர்த்தம்

வாயைக் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

 • 1

  (நோய், முதுமை போன்றவை காரணமாக) சாப்பிடுவதில் கட்டுப்பாடாக இருத்தல்.

  ‘நாளுக்கு நாள் அப்பாவுக்கு உடம்பு ஏறிக்கொண்டேபோகிறது. வாயைக் கட்ட மாட்டேன் என்கிறார்’
  ‘இந்த மூலிகையைச் சாப்பிடுவதாக இருந்தால் வாயைக் கட்ட வேண்டும்’
  ‘காய்ச்சல் விடும்வரை வாயைக் கட்டு’

 • 2

  ஒருவரைச் சுதந்திரமாகப் பேசவிடாமல் அல்லது தனது கருத்தைத் தெரிவிக்க விடாமல் தடுத்தல்.

  ‘மாமாவிடம் நான் பேசினால் சண்டை வந்துவிடும் என்று பயந்து என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் சேர்ந்து என் வாயைக் கட்டி விட்டார்கள்’
  ‘கட்சியில் எதைப் பற்றியும் பேச முடியாதபடி என் வாயைக் கட்டிவிட்டார்கள்’