வாயைப்பிள -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வாயைப்பிள1வாயைப்பிள2

வாயைப்பிள1

வினைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒரு செய்தி, காட்சி போன்றவற்றால் பிரமிப்படைந்து) பேச்சற்றுப்போதல்; அசந்துபோதல்.

  ‘ஒரு பெண் சைக்கிள் ஓட்டினாலே வாயைப்பிளக்கும் ஊர் இது’
  ‘அவன் புலியைச் சுட்டதாகச் சொன்ன கதையைக் கேட்டு எல்லோரும் வாயைப்பிளந்தார்கள்’
  ‘என்ன! நூறு ரூபாய்க்கு 48% வட்டியா என்று வாயைப்பிளந்தார்’

வாயைப்பிள -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வாயைப்பிள1வாயைப்பிள2

வாயைப்பிள2

வினைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (மதிப்புக் குறைவான முறையில் குறிப்பிடும்போது) இறத்தல்; மரணமடைதல்.

  ‘கிழவர் திடீரென்று வாயைப்பிளந்துவிட்டார்’