தமிழ் வாயை அடை யின் அர்த்தம்

வாயை அடை

வினைச்சொல்அடைக்க, அடைத்து

 • 1

  (ஒருவரை) மேற்கொண்டு பேசவிடாமல் செய்தல்.

  ‘நானாவது அப்பாவிடம் பேசுகிறேன் என்று சொன்னால் என் வாயை அடைத்துவிடுகிறீர்கள்’
  ‘குழந்தை கேட்ட கேள்வி அவள் வாயை அடைத்துவிட்டது’

 • 2

  (தன்னுடைய தவறு வெளிப்பட்டுவிடாமல் இருக்க அதில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து) எந்தத் தகவலும் வெளிவராமல் பார்த்துக்கொள்ளுதல்.

  ‘தன்னுடைய தில்லுமுல்லு வெளியே தெரியாமல் இருக்கப் பணத்தைக் கொடுத்து எல்லோர் வாயை அடைத்துவிடலாம் என்று பார்க்கிறாரா?’
  ‘சாட்சிகளின் வாயை அடைக்க எதிர்க்கட்சிக்காரர் மிரட்டுவதாகக் கேள்விப்பட்டேன்’