தமிழ் வாயை மூடிக்கொள் யின் அர்த்தம்

வாயை மூடிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒரு தவறு அல்லது விரும்பத்தகாத ஒன்று நடக்கும்போது) எதிர்ப்பைக் காட்டாமலோ மௌனமாகவோ இருத்தல்; கண்டும்காணாமல் இருத்தல்.

    ‘கண்ணெதிரே ஒரு அக்கிரமம் நடக்கும்போது, எப்படி வாயை மூடிக்கொண்டிருக்க முடியும்?’
    ‘அவர் அவ்வளவு பேசினார். அப்போது வாயை மூடிக்கொண்டிருந்துவிட்டு இப்போது என்னிடம் கேள்வி கேட்கிறாயா?’