தமிழ் வாய்ப்பு யின் அர்த்தம்

வாய்ப்பு

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை; சந்தர்ப்பம்.

  ‘இந்தச் சிறப்பான நூலைப் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’
  ‘வேலை வாய்ப்பு விளம்பரங்கள்’
  ‘நீங்கள் மேற்படிப்பைத் தொடர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்’
  ‘எதிர்பாராமல் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெற்றார்’
  ‘திரைப்படத் துறையில் உங்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?’
  ‘இந்த அரிய வாய்ப்பு கிடைத்ததற்காகச் சந்தோஷப்படுகிறேன்’
  ‘கல்வியறிவைப் பெறுவதில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’

 • 2

  சாத்தியம்.

  ‘கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய்கிடைக்க வாய்ப்பு உள்ளது’
  ‘போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுக்கு இடையே உடனடியாகச் சமாதானம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?’
  ‘காவல் நிறைந்த இந்த வளாகத்தில் வெளியார் வந்து திருட வாய்ப்பு இல்லை’
  ‘வயதான காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்குப் பார்வை பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு’
  ‘உரிய பயிற்சி இல்லாததால் சிறந்த ஆட்டக்காரர்கள் உருவாகும் வாய்ப்பு அடிபட்டுப்போகிறது’