வாரம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வாரம்1வாரம்2

வாரம்1

பெயர்ச்சொல்

  • 1

    ஏழு நாட்கள் கொண்ட காலப் பகுதி.

    ‘இது மாதத்தின் முதல் வாரம்’
    ‘அம்மாவைப் பார்க்க வாரக் கடைசியில் சொந்த ஊருக்குப் போவது அவருடைய வழக்கம்’
    ‘வாரச் சந்தை’
    ‘வார இதழ்’
    ‘எங்கள் கடைக்கு வெள்ளிக் கிழமை வார விடுமுறை ஆகும்’

வாரம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வாரம்1வாரம்2

வாரம்2

பெயர்ச்சொல்

  • 1

    விளைபொருளை நில உரிமையாளரும் விவசாயியும் குறிப்பிட்ட விகிதத்தில் பிரித்துக்கொள்ளச் சம்மதித்துச் செய்துகொள்ளும் ஏற்பாடு.

    ‘நிலத்தைக் குத்தகைக்கு விடாமல் வாரத்துக்கு விட்டிருக்கிறேன்’