வாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாரம்1வாரம்2

வாரம்1

பெயர்ச்சொல்

 • 1

  ஏழு நாட்கள் கொண்ட காலப் பகுதி.

  ‘இது மாதத்தின் முதல் வாரம்’
  ‘அம்மாவைப் பார்க்க வாரக் கடைசியில் சொந்த ஊருக்குப் போவது அவருடைய வழக்கம்’
  ‘வாரச் சந்தை’
  ‘வார இதழ்’
  ‘எங்கள் கடைக்கு வெள்ளிக் கிழமை வார விடுமுறை ஆகும்’

வாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாரம்1வாரம்2

வாரம்2

பெயர்ச்சொல்

 • 1

  விளைபொருளை நில உரிமையாளரும் விவசாயியும் குறிப்பிட்ட விகிதத்தில் பிரித்துக்கொள்ளச் சம்மதித்துச் செய்துகொள்ளும் ஏற்பாடு.

  ‘நிலத்தைக் குத்தகைக்கு விடாமல் வாரத்துக்கு விட்டிருக்கிறேன்’