வாரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாரி1வாரி2

வாரி1

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (மழைநீர் படாமல் இருக்கும் பொருட்டு) சுவருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கூரைப் பகுதி.

  ‘வாரியில் லாந்தர் தொங்கிக்கொண்டிருந்தது’

வாரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாரி1வாரி2

வாரி2

வினையடை

 • 1

  (‘இறை’, ‘வழங்கு’ போன்ற வினைகளுடன் வரும்போது) மிகுதியான; அதிக அளவில்.

  ‘பணத்தை வாரி இறைத்துத் தன் பெண்ணுக்குக் கல்யாணம் செய்தார்’
  ‘அவருக்கென்ன, யார் வீட்டுப் பணத்தையோ வாரி வழங்குகிறார்’

 • 2

  (தூக்குதல், அணைத்தல் போன்றவற்றைக் குறித்து வரும்போது) இரண்டு கைகளாலும் சேர்த்து வேகமாக.

  ‘குழந்தையை வாரி அணைத்துக்கொண்டாள்’