தமிழ் வால் யின் அர்த்தம்

வால்

பெயர்ச்சொல்

 • 1

  (விலங்குகளின்) உடலின் பின்புறத்தில் நன்றாக அசைக்கக் கூடியதாக இருக்கும் நீளமான உறுப்பு/(பறவைகளில்) பின்புறத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி.

  ‘பழகிய ஆளைக் கண்டதும் நாய் வாலை ஆட்டிக்கொண்டே ஓடிவந்தது’
  ‘ஆமையின் வால் தடித்துக் குட்டையாக இருக்கும்’
  ‘கரிச்சானின் வால் இரண்டாகப் பிரிந்திருப்பதால் அதனை ‘இரட்டைவால் குருவி’ என்பார்கள்’

 • 2

  துணி, காகிதம் போன்றவற்றைக் குறைந்த அகலம் கொண்டதாக நீள வாக்கில் நறுக்கிப் பட்டத்தின் கீழ்ப்பகுதியில் ஒட்டுவது.

  ‘வால் அறுந்த பட்டம் கீழே விழுந்தது’

 • 3

  (விமானத்தில்) முன்பக்கத்துக்கு நேர் எதிராகப் பின்பக்கம் அமைந்திருக்கும் பகுதி.

  ‘விமானத்தின் வால் பகுதியில் திடீரென்று தீப் பிடித்ததால் விமானம் தரையிறக்கப்பட்டது’

தமிழ் வால் யின் அர்த்தம்

வால்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு குறும்பு; சேட்டை.

  ‘அவனுக்கு வால் அதிகமாகிவிட்டது’

 • 2

  பேச்சு வழக்கு குறும்பு செய்யும் சிறுவன் அல்லது சிறுமி.

  ‘அந்த வாலைக் கூப்பிடு!’
  ‘அவன் சரியான வால்’