தமிழ் வாலாட்டு யின் அர்த்தம்
வாலாட்டு
வினைச்சொல்
- 1
(பிறருக்கு) தொல்லை தருதல்.
‘பெண்களிடம் வாலாட்டுபவர்களைப் பிடிப்பதற்குக் காவல்துறை சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’ - 2
சண்டைக்கு இழுக்கும் விதத்தில் வம்பு செய்தல்.
‘என் பலம் தெரியாமல் அவன் என்னிடம் வாலாட்டுகிறான்’‘அவன் நம்மிடமே வாலாட்டுகிறானா? அவனுக்குச் சரியான பாடம் கற்றுத்தருவோம்’