தமிழ் வாழ்க்கை யின் அர்த்தம்
வாழ்க்கை
பெயர்ச்சொல்
- 1
உயிருடன் இருந்து இயங்கும் நிலை.
‘பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றி ஆராய்ந்தார்’ - 2
(மனிதர்களின்) பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம்/அதனைக் குறிப்பிட்ட விதத்தில் அனுபவிக்கும் அல்லது நடத்தும் நிலை; வாழ்வு.
‘ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து தன் சொத்து முழுவதையும் தொலைத்துவிட்டார்’‘சராசரி வாழ்க்கை நடத்த இந்த வருமானம் போதாது’‘இந்த இளம் வயதிலேயே வாழ்க்கை சலித்துப்போய்விட்டதா உனக்கு?’‘இந்த இயந்திர வாழ்க்கை எனக்கு அலுத்துவிட்டது’‘இது பெரியவரால் எனக்குக் கிடைத்த வாழ்க்கை’