தமிழ் வாழ்வு யின் அர்த்தம்

வாழ்வு

பெயர்ச்சொல்

 • 1

  வாழ்தல்; வாழ்க்கை.

  ‘அதற்குள் வாழ்வில் சலிப்பா?’
  ‘அவர் தன் ஆயுள் முழுதும் எளிய வாழ்வு நடத்தினார்’
  ‘இயற்கையான சூழல் ஆரோக்கியமான வாழ்வை அளிக்கிறது’
  ‘மீனவர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைக் கடலிலேயே கழிக்கின்றனர்’

 • 2

  (நல்ல முறையில் அல்லது சிறப்பான முறையில் ஒருவருக்கு) வாழ்க்கையை அமைத்துத்தருதல்.

  ‘பல ஏழைகளுக்கு வாழ்வு கொடுத்த வள்ளல்’
  ‘கதாநாயகி கதாநாயகனிடம் ‘எனக்கு நீங்கள்தான் வாழ்வு தர வேண்டும்’ என்று கெஞ்சும் கட்டம் மிகவும் அற்பத்தனமாக இருக்கிறது’

 • 3

  (ஒன்று அல்லது ஒருவர் இருக்கும் நிலையில்) ஏற்றம்; உயர்நிலை.

  ‘‘பொட்டல் காடாக இருந்த இந்த ஊருக்கு இப்போது கிடைத்திருக்கும் வாழ்வைப் பாருங்கள்!’ என்றார் அவர்’
  ‘‘அவனுக்கு வந்த வாழ்வைப் பாரேன். அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கிறதாம்’ என்று சித்தி ஆச்சரியப்பட்டாள்’