வாழ்த்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாழ்த்து1வாழ்த்து2

வாழ்த்து1

வினைச்சொல்வாழ்த்த, வாழ்த்தி

 • 1

  ஒருவருக்கு மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டுதல்; ஒருவருக்குக் குறிப்பிட்ட நன்மை ஏற்பட வேண்டும் என்று தான் விரும்புவதைத் தெரிவித்தல்.

  ‘‘நீ வெற்றி பெறுவாய் அதில் சந்தேகம் இல்லை’ என்று வாழ்த்தி வழியனுப்பினார்’
  ‘காலில் விழுந்த மணமக்களை ‘தீர்க்காயுசுடன் இருங்கள்!’ என்று வாழ்த்தினார் பெரியவர்’
  ‘எனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று அவன் சொன்னவுடன் கைகுலுக்கி வாழ்த்தினேன்’
  ‘நீ என் மகனின் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்’

வாழ்த்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாழ்த்து1வாழ்த்து2

வாழ்த்து2

பெயர்ச்சொல்

 • 1

  (திருமணமானவர், வெற்றி அடைந்தவர் முதலியோருக்கு) மகிழ்ச்சியை வெளிப்படுத்தித் தெரிவிக்கும் பாராட்டு.

  ‘தேர்வில் முதல் மாணவனாகத் தேறியதற்கு என் வாழ்த்துகள்’
  ‘அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினேன்’