தமிழ் விக்கிரகம் யின் அர்த்தம்

விக்கிரகம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கோயில்களில்) வழிபாட்டுக்கு உரிய உலோகச் சிலை.

    ‘இந்தக் கோயிலில் இருப்பவை பஞ்சலோக விக்கிரகங்கள்தான்’
    ‘குழந்தை தங்க விக்கிரகம்போல் இருக்கிறது’
    ‘வீட்டில் ஐயப்பன் விக்கிரகம் வைத்து அவர் பூஜை செய்கிறார்’