விகாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விகாரம்1விகாரம்2

விகாரம்1

பெயர்ச்சொல்

 • 1

  (ஆக, -ஆன) அவலட்சணம்; கோரம்.

  ‘அவன் பார்ப்பதற்கு விகாரமாக இருந்தான்’
  ‘சுவரில் நிழல்கள் விகாரமாகத் தெரிந்தன’
  ‘அவன் விகாரமாகச் சிரித்தான்’

 • 2

  இயல்பு திரிந்த நிலை/விகற்பம்.

  ‘கோபத்தால் அவர் முகம் விகாரம் அடைந்தது’
  ‘மன விகாரங்கள்’

 • 3

  இலக்கணம்
  (சொற்கள் இணையும்போது ஓர் எழுத்துத் தோன்றுதல், மாறுதல் அல்லது இல்லாமல்போதல் ஆகிய) மாற்றம்.

விகாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விகாரம்1விகாரம்2

விகாரம்2

பெயர்ச்சொல்

 • 1

  புத்த பிக்குகளின் இருப்பிடமாகவும் விளங்கும் ஆலயம்.

  ‘நாகப்பட்டினக் கடற்கரையில் ஒரு பௌத்த விகாரம் உள்ளது’