தமிழ் விகிதம் யின் அர்த்தம்

விகிதம்

பெயர்ச்சொல்

 • 1

  (வட்டி, ஊதியம் முதலியவை குறித்து வரும்போது) குறிப்பிட்ட வரையறைகளின்படி குறிப்பிட்டதற்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவு.

  ‘வரி விளம்பரங்களுக்கான கட்டண விகிதம்’
  ‘ஊதிய விகிதத்தை மாற்ற வேண்டும் என்பது தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கை’
  ‘வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது’

 • 2

  (கணக்கிட எடுத்துக்கொள்ளும்) ஒரு அளவு மற்றொரு அளவினுள் எத்தனை முறை அடங்குகிறது என்று காட்டுவதன்மூலம் இரு அளவுகளுக்கு இடையிலான தொடர்பைக் காட்டும் முறை.

  ‘நூறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அந்த நாட்டில் மருத்துவர்கள் உள்ளனர்’
  ‘உடல்நலம் குன்றாமல் இருக்க நமது ரத்தத்தில் இரும்புச்சத்து ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டியது அவசியம்’
  ‘அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலகில் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது’
  ‘இந்த இரண்டு மருந்துகளையும் சம விகிதத்தில் கலந்து பயிருக்குத் தெளிக்க வேண்டும்’