தமிழ் விசாரணை யின் அர்த்தம்

விசாரணை

பெயர்ச்சொல்

 • 1

  (குற்றம், பிரச்சினை போன்றவற்றில் அதிகாரபூர்வமாக) உண்மையை அறிவதற்காகக் கேள்வி கேட்டல், சோதித்தல் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கை.

  ‘காவலர்கள் குற்றம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்’
  ‘பெண் காவலர்களின் முன்னிலையில்தான் பெண்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது’
  ‘கைதியின் மரணம்பற்றிச் சந்தேகம் எழுந்திருப்பதால் வட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’
  ‘அவர்மீது லஞ்சப்புகார் வந்ததையடுத்துத் துறை விசாரணை நடந்தது’

 • 2

  (நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவதற்காக) வாதப் பிரதிவாதங்களை ஆராய்தல், சாட்சிகளை விசாரித்தல் போன்ற முறைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கை.

  ‘வழக்கு விசாரணை தள்ளிப்போடப்பட்டுள்ளது’
  ‘இன்று உங்கள் வழக்கு விசாரணைக்கு வருகிறது’
  ‘வெடிகுண்டு வழக்கு விசாரணை நாளை தொடங்குகிறது’