தமிழ் விசாரி யின் அர்த்தம்

விசாரி

வினைச்சொல்விசாரிக்க, விசாரித்து

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஒருவரிடம்) விபரங்களைக் கேட்டறிதல்.

  ‘பையன் நல்லவனா என்று விசாரித்தேன்’
  ‘என் சம்பளம் எவ்வளவு என்று ஏன் விசாரிக்கிறாய்?’
  ‘அந்தப் பகுதியிலேயே நல்ல பள்ளிக்கூடம் எது என்று விசாரித்தார்’
  ‘அவனைப் பற்றி விசாரித்ததில் எந்தத் தகவலும் தெரிந்துகொள்ள முடியவில்லை’
  ‘வீட்டு இலக்கத்தைச் சொல்லி விசாரித்தபோதும் நண்பரின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை’

 • 2

  (குற்றம், பிரச்சினை போன்றவற்றில் அதிகாரபூர்வமாக) உண்மையை அறிவதற்காகக் கேள்வி கேட்டல், சோதித்தல் போன்றவற்றின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

  ‘கொடுத்த புகாரை விசாரிக்காத காவல்துறை ஆய்வாளரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்’
  ‘நகைக்கடைக் கொள்ளையைப் பற்றிக் காவல்துறையினர் முழுவீச்சில் விசாரித்துவருகின்றனர்’
  ‘இளைஞர் அணித் தலைவரின் மேல் தொண்டர்கள் புகார் செய்ததை அடுத்துக் கட்சியின் உயர்மட்டக் குழு இதுகுறித்து விசாரித்துவருகிறது’

 • 3

  (நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவதற்காக) வாதப் பிரதிவாதங்களை ஆராய்தல், சாட்சிகளைக் கேள்வி கேட்டல் போன்ற முறைகளில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

  ‘வழக்கை விசாரித்துக் குற்றவாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கினார்’

 • 4

  (சம்பந்தப்பட்ட வரிடம் நலம்) கேட்டல்.

  ‘நண்பரிடம் நலம் விசாரித்தான்’
  ‘அப்பா உங்களை மிகவும் விசாரித்தார்’

 • 5