விசிறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விசிறி1விசிறி2விசிறி3

விசிறி1

பெயர்ச்சொல்

 • 1

  (கையால் அசைத்துக் காற்று வரச் செய்வதற்காக) வட்ட வடிவில் விரித்த ஓலையை உடைய அல்லது வெட்டப்பட்ட அட்டையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிய சாதனம்.

  ‘குழந்தை தூங்கும்வரை விசிறியால் விசிறினாள்’
  ‘விசிறிக் காம்பால் முதுகைச் சொரிந்துகொண்டார்’

விசிறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விசிறி1விசிறி2விசிறி3

விசிறி2

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு கலைஞரின், எழுத்தாளரின்) ரசிகர்.

  ‘நான் மதுரை சோமுவின் தீவிர விசிறி’
  ‘படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அந்த இளம் நடிகையை அவரது விசிறிகள் சூழ்ந்துகொண்டனர்’

விசிறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விசிறி1விசிறி2விசிறி3

விசிறி3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (குறில் அல்லது நெடில்) உயிர் எழுத்தைச் சுட்டிக்காட்ட மெய்யெழுத்தின் முன் அல்லது மேல் போடப்படும் அடையாளக் குறி; கொம்பு.