தமிழ் விசிறு யின் அர்த்தம்

விசிறு

வினைச்சொல்விசிற, விசிறி

 • 1

  (காற்று வருமாறு) விசிறியை அசைத்தல்; காற்று வரச் செய்தல்.

  ‘குழந்தைக்கு வியர்க்கிறது. சற்று விசிறு!’

 • 2

  (பரந்து விழும்படி) வீசுதல்.

  ‘கோபத்தில் ரூபாய் நோட்டுகளை விசிறி எறிந்தான்’
  ‘பத்திரிகைகளைக் குழந்தை விசிறி அடித்தது’
  உரு வழக்கு ‘இதுவரை நாங்கள் கொடுத்த மனுக்களை எல்லாம் அமைச்சர் விசிறி அடித்துவிட்டார்’