விசுவாசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விசுவாசி1விசுவாசி2

விசுவாசி1

வினைச்சொல்விசுவாசிக்க, விசுவாசித்து

கிறித்தவ வழக்கு
 • 1

  கிறித்தவ வழக்கு
  (கடவுளை உண்மையாக) நம்புதல்; நம்பிக்கை வைத்தல்.

  ‘‘கர்த்தரை விசுவாசியுங்கள்’ என்று பிரசங்கம் பண்ணினார்’

விசுவாசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விசுவாசி1விசுவாசி2

விசுவாசி2

பெயர்ச்சொல்

 • 1

  முதலாளி, அரசியல் தலைவர் போன்றோரிடம் அல்லது ஒரு அமைப்பு போன்றவற்றிடம் விசுவாசம் கொண்டவர்.

  ‘ஆங்கிலேய விசுவாசிகளைக் கேலிசெய்து பாரதியார் சில பாடல்களை எழுதியிருக்கிறார்’
  ‘கட்சித் தலைமை உண்மையான விசுவாசிகளை ஓரங்கட்டிவிட்டுச் சந்தர்ப்பவாதிகளைக் கட்சிக்குள் கொண்டுவரப் பார்க்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்’

 • 2

  கிறித்தவ வழக்கு
  (கடவுள்மேல்) முழு நம்பிக்கை வைத்தவர்.

  ‘விசுவாசிகளைக் கர்த்தர் கைவிட மாட்டார்’