தமிழ் விசேஷம் யின் அர்த்தம்

விசேஷம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (வீட்டில் நடக்கும்) சுப நிகழ்ச்சி; பண்டிகை.

  ‘வீட்டு விசேஷங்களில் வெற்றிலைபாக்கிற்கு எப்போதும் ஒரு இடம் உண்டு’
  ‘ஊரில் ஏதாவது விசேஷம் என்றால் அம்மா பட்டுப் புடவை கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவாள்’

 • 2

  குறிப்பிடத் தகுந்தது.

  ‘கிருஷ்ணன் கோயில் உற்சவத்தில் வழுக்குமரம் ஏறுதல் விசேஷமான விளையாட்டு’
  ‘விசேஷமாகச் சொல்ல என்னிடம் செய்தி எதுவும் இல்லை’
  ‘படத்தில் விசேஷமாக எதுவும் கிடையாது’

 • 3

  (குறிப்பிடத் தகுந்த) செய்தி; விஷயம்.

  ‘ஊரில் ஏதாவது விசேஷம் உண்டா?’
  ‘என்னைப் பார்க்க வந்திருக்கிறாயே, என்ன விசேஷம்?’

 • 4

  (வழக்கத்திலிருந்து மாறுபட்டு) சிறப்பானது; பிரத்தியேகமானது.

  ‘விருந்தினர்களுக்கு என்று விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட உணவு’
  ‘விசேஷமான ஜாதகம்’
  ‘திருவாதிரை அன்று விசேஷமாகக் களி செய்து நடராஜப் பெருமானுக்குப் படைப்பார்கள்’

 • 5

  (குறிப்பாக) நல்ல பலனைத் தருவது.

  ‘திருநள்ளாறு கோயிலுக்குப் போய் வந்தால் ரொம்ப விசேஷம் என்று சொல்கிறார்கள்’