விசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விசை1விசை2

விசை1

பெயர்ச்சொல்

 • 1

  ஆற்றல்.

  ‘அண்டார்டிகாவின் புவி ஈர்ப்பு விசை, பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருப்பதைவிட அதிகமாக உள்ளது’
  ‘இரண்டு பரப்புகள் ஒன்றின்மீது ஒன்று நகரும்போது அவற்றிடையே ஓர் எதிர்ப்பு விசை ஏற்படுகிறது’
  ‘ஒவ்வொரு காந்தத்தைச் சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அக்காந்தத்தின் விசை செயல்படுகிறது’
  ‘விண்வெளியிலே மின் விசை உற்பத்தி நிலையங்களையும் இனி அமைக்கலாம்’
  ‘நீராவி விசை’

 • 2

  வேகம்.

  ‘அவன் கை என்மீது விசையோடு மோதியது’
  ‘கல்லை எடுத்து மாங்காயைக் குறிபார்த்து விசையாக எறிந்தான்’
  ‘‘விசையாக நட’ என்று அப்பா அதட்டினார்’

 • 3

  கருவியை இயக்க அல்லது நிறுத்தச் செய்யும் சாதனம்/(துப்பாக்கியில்) குதிரை.

  ‘விசையை அழுத்தியதும் அழைப்பு மணி ஒலித்தது’
  ‘விசையைத் தட்டியதும் துப்பாக்கியிலிருந்து குண்டு சீறிப் பாய்ந்தது’

விசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விசை1விசை2

விசை2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு தடவை; முறை.

  ‘அந்தப் பாட்டை இன்னும் ஒரு விசை பாடுங்களேன்’
  ‘அவரைப் பார்க்க எத்தனை விசைதான் போவது?’
  ‘ஒரு விசை நானும் அம்மாவும் கோயிலுக்குப் போயிருந்தபோது அவரைப் பார்த்தோம்’