தமிழ் விட்டம் யின் அர்த்தம்

விட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (கூரையின் பகுதியாகக் கீழ்ப்புறத்தில் அமைந்துள்ள) உத்திரம்.

  ‘விட்டத்தில் ஒரு பல்லி ஓடியது’
  ‘விட்டத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்’

 • 2

  (வண்டிக் கூண்டில்) உள்பக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும் குறுக்குச் சட்டம்.

 • 3

  கணிதம்
  (வட்டத்தில்) ஆரத்தின் இரு மடங்காகவும் வட்டத்தைச் சம பங்காகப் பிரிப்பதாகவும் இருக்கும் அளவு அல்லது கோடு.

  ‘பூமியின் விட்டம் 12756.3 கி.மீ. ஆகும்’
  ‘ஒரு வட்டத்தின் விட்டம் ஏழு செ.மீ. என்றால் அதன் சுற்றளவு என்ன?’