தமிழ் விட்டுப்போ யின் அர்த்தம்

விட்டுப்போ

வினைச்சொல்-போக, -போய்

 • 1

  (பிடிப்பு, இணைப்பு) உடைந்து பிரிதல்; தனித்தனியாகப் போதல்.

  ‘சங்கிலியில் ஒரு கண்ணி விட்டுப்போனதால் சரிசெய்யக் கொடுத்திருக்கிறாள்’
  ‘சட்டையில் தையல் விட்டுப்போய்விட்டது’

 • 2

  (உறவு, தொடர்பு, பற்று போன்றவை) தொடராமல் போதல்.

  ‘இரு குடும்பங்களுக்கு இடையே உறவு விட்டுப்போய் வெகு நாளாகிறது’
  ‘என் சகோதரர்கள் மேல் இருந்த பாசம் விட்டுப்போய் ரொம்ப நாளாகிறது’

 • 3

  விடுபடுதல்.

  ‘இந்தப் பக்கத்தில் ஒரு வரி விட்டுப்போயிருக்கிறது’
  ‘நான்கு நாள் கணக்கு எழுதாமல் விட்டுப்போயிருக்கிறது’
  ‘விட்டுப்போன மளிகைச் சாமான்களை எழுதிக்கொள்’