தமிழ் விட்டுவிட்டு யின் அர்த்தம்

விட்டுவிட்டு

வினையடை

  • 1

    தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும்.

    ‘மழை விட்டுவிட்டுப் பெய்கிறது’
    ‘மின்சாரம் விட்டுவிட்டு வருகிறது’
    ‘எனக்கு நெஞ்சில் விட்டுவிட்டு லேசாக வலிக்கிறது’