தமிழ் விட்டுவை யின் அர்த்தம்

விட்டுவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  விலக்கிவைத்தல்; ஒதுக்கி வைத்தல்.

  ‘அலுவலகத்தில் யாரையும் விட்டுவைக்காமல் எல்லோரிடமும் கடன் வாங்கியிருக்கிறான்’
  ‘சாப்பாட்டு விஷயத்தில் அவன் எதையும் விட்டுவைப்பதில்லை’
  ‘கவிதை, நாவல், கட்டுரை என்று அவர் எந்த வடிவத்தையும் விட்டுவைக்கவில்லை’

 • 2

  ஒருவருக்குத் தண்டனை தராமலோ பாதிப்பு ஏற்படுத்தாமலோ அப்படியே விடுதல்.

  ‘ஒரே ஊர் என்பதால் அவனை விட்டுவைத்தேன். இன்று என்னிடமே மோதுகிறான்’
  ‘நான் உன்னை ஏமாற்றினால் நீ என்னை விட்டுவைப்பாயா?’