விடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விடி1விடி2

விடி1

வினைச்சொல்விடிய, விடிந்து

 • 1

  இரவு முடிவடைந்து பகல் பொழுது துவங்குதல்; காலைப் பொழுதின் வெளிச்சம் பரவுதல்.

  ‘ஆறு மணிக்குத்தான் விடிகிறது’
  ‘பொழுது விடிய இன்னும் நேரம் இருக்கிறது’
  ‘விடிந்தால் தீபாவளி’
  ‘அவன் ஊர் போய்ச் சேர்வதற்குள் விடிந்துவிட்டது’
  ‘விடிந்து வெகு நேரம் ஆகியும் வெயில் தெரியவில்லை’
  ‘விடிந்ததும் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்’
  உரு வழக்கு ‘நமக்கு எப்போது விடியுமோ தெரியவில்லை’

விடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விடி1விடி2

விடி2

வினைச்சொல்விடிய, விடிந்து

 • 1

  (பழி, பொறுப்பு முதலியவை ஒருவரை வந்து) சேர்தல்.

  ‘‘திருடன்’ என்ற பழி என் தலையில் வந்து விடிந்ததே!’
  ‘அந்தப் பையனின் படிப்பைக் கெடுத்த பாவம் நம் தலையில் விடியாமல் தப்பித்தோம்’