தமிழ் விடுகதை யின் அர்த்தம்

விடுகதை

பெயர்ச்சொல்

  • 1

    (அது என்ன, அது யார் என்பது போன்ற கேள்வியுடன்) விடையை ஊகித்துக் கண்டறிவதற்கான விவரங்களைத் தன்னிடத்திலேயே உள்ளடக்கியிருக்கும் பொழுதுபோக்கு விளையாட்டாக வழங்கும் வாசகம்.

    ‘‘பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்.’ இந்த விடுகதைக்கு உனக்கு விடை தெரியுமா?’
    ‘நான் ஒரு விடுகதை போடட்டுமா?’