தமிழ் விடுபடு யின் அர்த்தம்

விடுபடு

வினைச்சொல்விடுபட, விடுபட்டு

 • 1

  (ஒட்டியிருத்தல், பிடித்திருத்தல் முதலிய நிலைகளிலிருந்து) நீங்குதல்; பிரிதல்; விலகுதல்.

  ‘குழந்தை அவள் அணைப்பிலிருந்து விடுபட்டு ஓடியது’
  ‘வில்லிலிருந்து விடுபட்ட அம்பு பறவையின் உடலில் தைத்தது’

 • 2

  (ஒரு நிலை, பழக்கவழக்கம், பிரச்சினை, பாதிப்பு முதலியவற்றிலிருந்து) வெளிவருதல்; மீளுதல்.

  ‘இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி விடுபடுவது என்று யோசித்தான்’
  ‘போதைப்பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பிறகு அவற்றின் பாதிப்பிலிருந்து எளிதில் விடுபட முடியாது’
  ‘இவனுடைய தொல்லையிலிருந்து விடுபட வழியே இல்லையா என்று ஏங்கினாள்’

 • 3

  (ஒன்றில் இடம்பெற வேண்டியது) இடம்பெறாமல் போதல்; விட்டுப்போதல்; (முடிக்க வேண்டியது) பாக்கியிருத்தல்.

  ‘இந்தப் படத் தொகுப்பில் சில முக்கியமான படங்கள் விடுபட்டுள்ளன’
  ‘விடுபட்ட வேலைகளைக் கவனிப்பதற்காகவே அவர் திரும்பி வந்திருக்கிறார்’