தமிழ் விடுப்புப் பிடுங்கு யின் அர்த்தம்

விடுப்புப் பிடுங்கு

வினைச்சொல்பிடுங்க, பிடுங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரிடம்) பேச்சுக் கொடுத்து விபரங்களைப் பெறுதல்; வாயைக் கிண்டுதல்.

    ‘யாரைக் கண்டாலும் அவர்களிடம் விடுப்புப் பிடுங்குவதே அவனுக்கு வேலை’
    ‘இவனோடு கவனமாக இருக்க வேண்டும். இவன் விடுப்புப் பிடுங்கி ஊரெல்லாம் சொல்லிவிடுவான்’