தமிழ் விடுமுறை யின் அர்த்தம்

விடுமுறை

பெயர்ச்சொல்

 • 1

  (அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில்) ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்.

  ‘கோடை விடுமுறை’
  ‘பிரதி வியாழன் கடை விடுமுறை’
  ‘விடுமுறை நாட்களில் வேலைக்கு வரும் தொழிலாளருக்கு இரட்டிப்புச் சம்பளம்’
  ‘குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்த தினம் ஆகியவை தேசிய விடுமுறை நாட்கள் ஆகும்’

 • 2

  பணிக்கு வராமல் இருப்பதற்கான அனுமதி; விடுப்பு.

  ‘அரை நாள் விடுமுறைகூட உனக்குக் கிடைக்காதா?’
  ‘அந்த அதிகாரி தற்போது விடுமுறையில் உள்ளார்’