விடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விடை1விடை2

விடை1

வினைச்சொல்விடைக்க, விடைத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (மூக்கு பக்கவாட்டில்) புடைத்தல் அல்லது (மூக்கை) புடைத்திருக்கச் செய்தல்.

  ‘கோபத்தால் மூக்கு விடைத்தது’
  ‘இதற்குப் போய் மூக்கை விடைத்துக்கொண்டு சத்தம்போடுகிறாயே!’

 • 2

  பேச்சு வழக்கு (உடல்) விறைத்து நிற்றல் அல்லது (உடலை) நிமிர்த்தி விறைத்து நிற்றல்.

  ‘பந்தயக் குதிரை மாதிரி விடைத்து நிற்கிற உடம்பு’

விடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விடை1விடை2

விடை2

பெயர்ச்சொல்

 • 1

  புதிர், விடுகதை போன்றவற்றுக்குச் சரியான பதில்.

  ‘விளையாட்டுக் கணக்குக்குத் தாத்தா கடைசிவரை விடை கூறவில்லை’
  ‘அவன் போட்ட விடுகதைக்கு என்னால் விடை சொல்ல முடியவில்லை’
  ‘ஆங்கில நாளேடுகளில் வரும் புதிர்களுக்கு விடை எழுதுவதுதான் அவருடைய பொழுதுபோக்கு’

 • 2

  (தேர்வு, போட்டி போன்றவற்றில் கேட்கப்படும் கேள்விக்கு) பதில்.

  ‘ஏதேனும் மூன்று கேள்விகளுக்கு விடை எழுதவும்’
  ‘உங்கள் வினாவிற்கு என் விடை இதுதான்’

 • 3

  விளக்கம்.

  ‘எங்களுடைய சந்தேகங்களுக்குச் சரியான விடை கிடைக்கவில்லை’
  ‘அங்கு நடந்ததை அவர் விவரமாகக் கூறியதும் மர்மத்திற்கான விடை கிடைத்தது’
  ‘வாழ்க்கை எழுப்பும் கேள்விகளுக்கு விடை உண்டா?’