தமிழ் விண் யின் அர்த்தம்

விண்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு வான்; ஆகாயம்.

  ‘விமானத்தைக் கொண்டு விண்ணில் சாகசம் புரிந்தனர்’
  ‘கரகோஷம் விண்ணைப் பிளந்தது’
  ‘விண்ணில் மேகங்கள் சூழ்ந்தன’
  ‘விண்ணில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் நமக்குப் பயனுள்ள தகவல்களை வழங்குகின்றன’
  ‘ஏவுகணை விண்ணை நோக்கிச் சீறிப் பாய்ந்தது’

 • 2

  உயர் வழக்கு விண்வெளி.

  ‘விண்ணிலிருந்து விழும் விண்கற்களில் உலோகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்’