தமிழ் விண்ணப்பி யின் அர்த்தம்

விண்ணப்பி

வினைச்சொல்விண்ணப்பிக்க, விண்ணப்பித்து

 • 1

  (ஒரு அமைப்பு அல்லது வேலை, படிப்பு போன்றவற்றில் சேருவதற்காக) விண்ணப்பம் செய்தல்; மனு அளித்தல்.

  ‘தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு ஆள் எடுப்பதாக வந்த விளம்பரத்தைப் பார்த்து அந்த நிறுவனத்துக்கு விண்ணப்பித்தான்’
  ‘சென்னையில் நான்கைந்து கல்லூரிகளில் என் பையனுக்கு விண்ணப்பித்திருக்கிறேன்’

 • 2

  (ஒருவரிடம் ஒன்றைச் செய்ய வேண்டுமென) முறைப்படி எழுத்துமூலமாக அல்லது வாய்மொழியாக வேண்டிக் கேட்டல்.

  ‘வறட்சி நிவாரணப் பணிகளில் அரசு உடனே ஈடுபட வேண்டும் என்று அமைச்சரிடம் விண்ணப்பித்துக்கொண்டார்’