தமிழ் விண்ணப்பம் யின் அர்த்தம்

விண்ணப்பம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர் ஒரு அமைப்பு அல்லது வேலை, படிப்பு முதலியவற்றில் சேருவதற்காக எழுதும் தன்னுடைய) பெயர், வயது, கல்வித் தகுதி போன்ற அடிப்படைத் தகவல்கள் அடங்கிய கடிதம் அல்லது படிவம்; மனு.

  ‘தட்டச்சர் வேலைக்கு விண்ணப்பம் போட்டிருக்கிறேன்’
  ‘விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’
  ‘மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 10 ஆம் தேதியிலிலிருந்து வழங்கப்படும்’

 • 2

  (விடுப்பு, இடமாற்றம் போன்றவற்றைப் பெறுவதற்காக ஒருவர்) முறைப்படி வேண்டிக் கேட்டுக்கொள்ளும் கடிதம்.

  ‘எங்கள் பள்ளியில் விடுப்பு விண்ணப்பம் கொடுக்காமல் விடுப்பு எடுத்தால் அபராதம் விதிக்கப்படும்’
  ‘இடமாற்றத்துக்காகப் போன வாரம்தான் விண்ணப்பம் செய்திருக்கிறேன்’

 • 3

  (அதிகாரிகள் போன்றோரிடம்) குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி உரிய முறையில் எழுதித் தரும் முறையீடு.

  ‘எங்கள் கிராமத்துக்குச் சாலை வசதி அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் செய்திருக்கிறோம்’