தமிழ் விதண்டாவாதம் யின் அர்த்தம்

விதண்டாவாதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒருவர்) தனது கருத்தில் அல்லது பேச்சில் நியாயமில்லை என்று தெரிந்தும் வீணாகச் செய்யும் வாதம்.

    ‘விதண்டாவாதமாகப் பேசிக்கொண்டிருக்காமல் பிரச்சினைக்கு என்ன வழி என்று யோசிப்போம்’
    ‘நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளைப் பற்றிய விவாதங்களில் விதண்டாவாதங்களே அதிகம்’
    ‘தமிழில் நல்ல எழுத்தாளர்களே கிடையாது என்று அவர் சொல்வதெல்லாம் விதண்டாவாதம்தான்’