தமிழ் வித்திடு யின் அர்த்தம்

வித்திடு

வினைச்சொல்-இட, -இட்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒன்று) தோன்றக் காரணமாக இருத்தல்; வழிவகுத்தல்.

    ‘அவருடைய பேச்சு வன்முறைக்கு வித்திடுவதாக இருந்தது’
    ‘சிறுகதை இலக்கியத்துக்கு வித்திட்டவர்களுள் வ.வே.சு. ஐயர் முக்கியமானவர் ஆவார்’