தமிழ் வித்தியாசம் யின் அர்த்தம்

வித்தியாசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒப்புமை உடையவற்றில்) மாறுபட்ட கூறு.

  ‘இந்த இரண்டு படங்களுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் உள்ளன’
  ‘இந்த இரண்டு சட்டைகளிலும் நிறம் மட்டும் வித்தியாசம்’
  ‘இரண்டு கையெழுத்துகளுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கவே செய்யும்’
  ‘ஊன்றிக் கவனித்தால் மட்டுமே அந்த இரட்டையர்களிடம் வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியும்’

 • 2

  வேறுபாட்டைக் காட்டும் அளவு.

  ‘ஒன்பதே வாக்கு வித்தியாசத்தில் ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார்’
  ‘கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஐந்து வயது வித்தியாசம்’
  ‘ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது’

 • 3

  வழக்கமானதாக இல்லாதது.

  ‘இந்தத் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானது’
  ‘இவர் எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்’
  ‘வித்தியாசமான உடை அலங்காரம்’
  ‘வித்தியாசமாக ஏதாவது எழுதிப் பாருங்களேன்’
  ‘பார்த்ததுமே இவர் வித்தியாசமான மனிதர் என்று தெரிந்தது’
  ‘உன் பேச்சு, செயல் எல்லாமே இன்று வித்தியாசமாக இருக்கிறது’

 • 4

  (உயர்வு, தாழ்வு போன்ற) பாகுபாடு.

  ‘குழந்தைகளிடையே வித்தியாசம் பார்க்கக் கூடாது’
  ‘எங்கள் அதிகாரி வித்தியாசம் பார்க்காமல் எல்லோரிடமும் சரிசமமாகப் பழகுவார்’