தமிழ் வித்தை யின் அர்த்தம்

வித்தை

பெயர்ச்சொல்

 • 1

  வியப்பு அடையச் செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் செயல்; சாகசம்.

  ‘இது குரங்கை வைத்து வித்தை காட்டிப் பிழைப்பவர்களைப் பற்றிய குறும்படம்’
  ‘மாயாஜால வித்தை’

 • 2

  ஒரு துறையின் அல்லது செயலின் நுணுக்கங்களில் பெற்றுள்ள தேர்ச்சி.

  ‘வில் வித்தை’
  ‘நான் சிலம்பம், கத்திச் சண்டை என்று எல்லா வித்தைகளையும் அவரிடம் கற்றுக்கொண்டேன்’
  ‘கணிப்பொறியை அவர் கையாளும் விதத்தை வைத்தே அவர் வித்தை தெரிந்தவர் என்று சொல்லிவிடலாம்’