தமிழ் விதம் யின் அர்த்தம்

விதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வகை; ரகம்.

  ‘திருமண அழைப்பிதழை அச்சிட்டிருப்பது புது விதமாக இருந்தது’
  ‘பறவைகள் பல விதம்’
  ‘விதவிதமான பலகாரங்கள்’
  ‘தாழம்பூவுக்கு ஒரு வித இனிய வாசனை உண்டு’
  ‘இந்த ஓவியத்தில் பல விதமான வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன’
  ‘ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது’
  ‘ஒரே விசை எப்படி இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்த முடியும்?’
  ‘அவனால் நமக்கு எந்த வித லாபமும் இல்லை’

 • 2

  முறை.

  ‘அவருக்கு மரியாதை தெரிவிக்கும் விதமாக எழுந்து நின்றான்’
  ‘அவர் வியக்கத்தக்க விதத்தில் பேசினார்’
  ‘இந்தப் பிரச்சினையை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம்’
  ‘சிறு வயதிலிருந்து நான் வளர்க்கப்பட்ட விதம் அப்படி’
  ‘எதிர்பாராத விதமாக நண்பனைக் கடைவீதியில் சந்தித்தேன்’
  ‘அக்பர் ஆட்சி செய்த விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது’
  ‘எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர் விளக்கினார்’