தமிழ் விதேசி யின் அர்த்தம்

விதேசி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்.

    ‘சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயரை விதேசி என்று கூறினோம்’

  • 2

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் பெயரடையாக) வெளிநாட்டில் தயாரிக்கப்படுவது.

    ‘விதேசிப் பொருள்களின் மேல் உள்ள மோகம்!’