விதை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விதை1விதை2

விதை1

வினைச்சொல்விதைக்க, விதைத்து

 • 1

  (விதையை ஓர் இடத்தில்) முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.

  ‘தோட்டத்தில் கம்பு விதைத்திருக்கிறேன்’
  ‘அடுத்த போகம் எள் விதைக்கலாம் என்று இருக்கிறேன்’
  ‘நிலத்தை உழுது விதைக்க நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன’
  ‘மார்கழி மாதம் விதைத்த உளுந்து நன்றாகச் செழித்து வளர்ந்துள்ளது’
  உரு வழக்கு ‘அவர் மனத்தில் இப்படி ஒரு சந்தேகத்தை விதைத்துவிட்டாயே?’
  உரு வழக்கு ‘குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை விதைக்கக் கூடாது’

விதை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விதை1விதை2

விதை2

பெயர்ச்சொல்

 • 1

  காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.

  ‘வாழை, அன்னாசி போன்றவற்றில் விதைகள் இல்லாமலேயே கனிகள் தோன்றுகின்றன’
  ‘தர்ப்பூசணி பழத்தின் உள்ளே நிறைய விதைகள் இருக்கும்’
  ‘இது வீரிய விதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நெல் ரகம்’

 • 2

  காண்க: விரை