தமிழ் வினியோகி யின் அர்த்தம்

வினியோகி

வினைச்சொல்வினியோகிக்க, வினியோகித்து

 • 1

  (தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள்கள் முதலியவற்றை) இலவசமாக அல்லது விற்பனை செய்வதற்காகப் பகிர்ந்து அளித்தல்.

  ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவத்தினர் உணவுப் பண்டங்களை வினியோகித்தார்கள்’
  ‘சுனாமி பாதித்த பகுதியில் பல தன்னார்வ அமைப்புகள் உடைகளையும் மருந்துகளையும் வினியோகித்தன’
  ‘விழா முடிந்ததும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வினியோகிக்கப்பட்டன’
  ‘ஆளுங்கட்சியை விமர்சிக்கும் விதத்திலான துண்டுப் பிரசுரங்களை மாநாட்டில் வினியோகித்தார்கள்’
  ‘அரசின் இந்தப் புதிய திட்டத்தின் மூலம் கையிருப்பு உணவு தானியங்களைத் தேவையான பகுதிகளில் வினியோகிக்க முடிந்தது’
  ‘கூட்டுறவு அங்காடிகள்மூலம் உணவுப் பொருள்கள் வினியோகிக்கப்படுகின்றன’