தமிழ் வினோதம் யின் அர்த்தம்

வினோதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வழக்கமானதாகவோ இயற்கையானதாகவோ இல்லாமல் மாறுபட்டு, வியப்பைத் தோற்றுவிப்பதாக அமைவது; விசித்திரம்.

  ‘அவன் வினோதமான உடை அணிந்திருந்தான்’
  ‘உன்னால் மட்டும் எப்படி இவ்வாறு வினோதமாகச் சிந்திக்க முடிகிறது?’
  ‘இயற்கையின் வினோதம் மனிதனுக்கு எளிதாகப் புரிவதில்லை’
  ‘இந்த அருங்காட்சியகத்தில் பல வினோதமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன’
  ‘எதற்காக என்னை அப்படி வினோதமாகப் பார்க்கிறாய்?’
  ‘காட்டில் ஒரு வினோதமான சத்தம் எழுந்தது’
  ‘செவ்வாய் கிரகத்தில் வினோதமான உயிர்கள் இருக்கக்கூடும் என்று சிலர் கருதுகிறார்கள்’